பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது.
பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்
Published on: 

திண்டுக்கல்,

பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியுள்ளது.

முருகன் கோவில் - ரோப்கார் சேவை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது.

இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. இதனிடையே, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 20ம் தேதி முதல் பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

மீண்டும் ரோப் கார் சேவை

இந்நிலையில், மின்மோட்டார் பழுது சரிபார்க்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பழனி ரோப்கார் சேவை 15 நாட்களுக்குப்பின் இன்று மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியாஇந்துள்ளனர்.

X