ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் வாசுகிஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கப்பார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உதவியாளர் சேகர் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் பேசுகையில், நாடழகானந்தல் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளது. எனவே, புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றார்.

இதற்கு ஆணையாளர் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு, கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர். தொடர்ந்து வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com