பங்குனி ஆராட்டு திருவிழா; சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
பங்குனி ஆராட்டு திருவிழா; சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com