தூத்துக்குடியில் கவாத்து பயிற்சி

தூத்துக்குடியில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் கவாத்து பயிற்சி
Published on

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த கவாத்து பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சொக்கலிங்கம், வெங்கடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கென்னடி, சக்திவேல் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com