

சென்னை,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம்: பொள்ளாச்சியில் காங்கிரஸ் சார்பில் தலைவர்கள் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்படும். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் பாசனம் தந்து விவசாயிகளுக்கு வாழ்வளித்த வரலாற்று தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்துதல் நாளை காலை 10.00 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தலைவர்களின் திருவுருவச் சிலை மற்றும் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சி கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எம்.பி. சக்திவேல், திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் கிட்டுசாமி, கோவை வடக்கு மாவட்டத்தலைவர் ரெங்கராஜன், திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் டி. செல்வகுமார், திருப்பூர் மாநகர தலைவர் கோபால் சாமி, கோவை மாநகர காங்கிரஸ் தலைவர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
மாநில பொதுக்குழு உறுப்பினரும், டி.பி.ஆர்.41, ஜே. கிருஷ்ணாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவரும், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு நீர் பகிர்மானக் குழு உறுப்பினருமான எம். கோவிந்தராஜன் கொடுங்கியம் பாசனசங்கத் தலைவர், சின்னு என்கின்ற சின்னசாமி, ராயர்பாளையம் பாசன சங்கத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் இந்நாள் - மேனாள் செயலாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய / சர்க்கிள், நகர, பேரூர், மண்டல, கிராம காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.