பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

நிபுணர் குழுவின் அறிக்கையை தி.மு.க. ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
Published on

சென்னை,

விமான நிலைய விவகாரத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை தி.மு.க. ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்..?

இந்த விஷயத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?

இவ்வாறு அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com