நாடாளுமன்ற தேர்தல்: ஜனவரி மாதத்துக்குள் கூட்டணி முடிவாகும் -டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி இம்மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திற்குள்ளோ முடிவாகும்.
நாடாளுமன்ற தேர்தல்: ஜனவரி மாதத்துக்குள் கூட்டணி முடிவாகும் -டி.டி.வி.தினகரன்
Published on

மதுரை,

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அ.ம.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி இம்மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திற்குள்ளோ முடிவாகும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்திருக்கிறார். அதேபோல் எங்களுடன் வருபவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். தலைமை செயலாளர் தகவலின்படி சென்னையில் 90 சதவீதத்திற்குமேல் சகஜ நிலை திரும்பிவிட்டது. மீதம் உள்ள இடங்களும் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று நான் நம்புகிறேன். கடலில் கச்சா எண்ணெய் தேங்கி இருப்பதை அகற்ற அனைவரும் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கென இருக்கும் உபகரணங்களை பயன்படுத்தி அதை அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு, நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.

இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com