நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com