பகுதி நேர ரேஷன் கடை- அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்

சோளிங்கர், மே.7- பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
பகுதி நேர ரேஷன் கடை- அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
Published on

சோளிங்கர்

பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சியில் பாணாவரம் கூட்டு ரோடு பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜூ தலைமையில் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பூரணச்சந்தர், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், நகர செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் ஜெய்கோபி வரவேற்றார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், கலெக்டர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜு, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், காங்கிரஸ் நகரத் தலைவர் டி கோபால், கொடைக்கல் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com