அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
Published on

ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் சென்னை ராயப் பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தஞ்சை கிழக்கு மாவட்டம், கும்பகோணம் மற்றும் சிவ கங்கை பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி அமைப்பை வலுப்படுத்தல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் அரசியல் நிலை உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படு கிறது.

அப்போது சில மாவட்ட நிர்வாகிகள், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியை கட்சி தலைமை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி. 'டி.டி.வி.தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அப்படியிருக்கும் போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?' என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனில் டி.டி.வி. தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'அ.தி.மு.க. ஆட்சி யில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து கொண்டு இருக்கும். ஆட்சியில் இல்லாததால் கட்சியில் இருந்து ஓடுபவர்களை மக் கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.+கடந்த காலங்களிலும் அ.தி.மு.க. தேர்தலில் தோல்வி கண்ட போதும், மீண்டும் பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. அதற்கு காரணம் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போல் எழும்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com