திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடை பெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
Published on

சுரங்கப்பாதை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, திருத்தணி, அரக்கோணம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லாத காரணத்தால் அடிக்கடி ரெயில் மோதி உயிர் இழப்புகள் நடந்து வந்தன.

இதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

விரைந்து முடிக்க கோரிக்கை

சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தல் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

எனவே பணியை அனைத்து வசதிகளுடன் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com