விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
Published on

செம்பட்டு,ஆக.2-

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் தினமும் காலை 7.50 மணிக்கு வருவது வாடிக்கை. இந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் இந்த விமானம் நேற்று காலை 11.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதேபோன்று திருச்சியில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானமும் தொழில்நுட்ப காரணங்களால் மதியம் 2.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றது. இந்த விமானங்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com