விஎஸ் பாபு மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழக கவர்னர் இரங்கல்

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ விஎஸ் பாபு இன்று பிற்பகல் காலமானார்
கவர்னர் அர்லேகர்
கவர்னர் அர்லேகர்
Published on: 

சென்னை கொளத்​தூர் தொகுதி எம்.எல்.ஏ விஎஸ் பாபு கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை​யில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வந்தனர். செப்டம்பர் 23-ம் தேதி விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. அந்தச் சூழலில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விஎஸ் பாபு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கவர்னர் அர்லேகரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அர்லேகர் கூறியிருப்பதாவது: "கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X