வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
வாகனம் மோதி புள்ளிமான் சாவு
Published on

திருப்புவனம்

பூவந்தி அருகே உள்ளது அரசனூர். இப்பகுதியில் வனத்துறை காடு உள்ளது. இங்கு மான்கள் அதிகம் வசித்து வருகின்றன. இவைகள் இரை தேடி சில சமயம் ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமாஞ்சோலை மேல்புறம் நேற்று இரவு 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த மான் சாலையை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிவகங்கை வனத்துறையினர் அங்கு சென்று மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அதை வனப்பகுதியில் புதைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com