பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்

பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்
Published on

கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், நல்லிக்கோவில், கரைப்பாளையம், திருக்காடுதுறை, புன்னம், பழமாபுரம், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் மயில்கள் அதிகளவில் உள்ளதால் பயிறு வகைகள் மற்றும் தானியங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகிறார்கள். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விடவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com