நீலகிரியில் தொடங்கியது பேரிக்காய் சீசன்! கிலோ ரூ.150-க்கு விற்பனை

பேரிக்காய் சுவை, சத்து மற்றும் உடல்நல நன்மைகள் நிறைந்த பழமாக விளங்குகிறது.
நீலகிரியில் தொடங்கியது பேரிக்காய் சீசன்! கிலோ ரூ.150-க்கு விற்பனை
Published on

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளது. இது தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.கிலோ ரூ. 150 வரை விற்கிறது.

பேரிக்காய் சுவை, சத்து மற்றும் உடல்நல நன்மைகள் நிறைந்த பழமாக விளங்குகிறது. இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார். இதில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதிலும் மலைக்காய்கறி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே கோத்தகிரி. அரவேணு, பேரார் மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் தேயிலை செடிகளின் நடுவே ஊடு பயிராக பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பேரிக்காய், வால் பேரிக்காய், ஆரஞ்சு ஆகிய பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேரிக்காய் சீசன்

தற்போது குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அதிகளவில் வர துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்களில் பேரிக்காய் சீசன் களை கட்டுகிறது. அதில், 'சாம்பல் பேரி, சட்டிபேரி, வால்பேரி, கத்திபேரி,'உட்பட பல வகையான பேரிக்காய்களை, விவசாயிகள், தோட்டக்கலை துறையினர் சாகுபடி செய்கின்றனர்.

சிம்ஸ் பூங்கா அருகே பழ பண்ணையில் பேரி சீசன் களைகட்டிய நிலையில் சட்டி பேரி, வால் பேரி உள்ளிட்டவற்றிற்கு மகசூல் அதிகரித்துள்ளது.இவற்றை விற்பனைக்காக பணியாளர்கள் பறித்து சேகரித்து வருகின்றனர். ஒரு கிலோ பேரிக்காய் ரூ.150 என சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com