ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வயதான அனைவருக்கும் நியாயமான பென்சன், உரிய மருத்துவ வசதி, இருப்பிடம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ராமசாமி, கருப்பன், மணி, செல்வராஜ், மணிராஜா, காளியப்பன், இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகள் 1.1.2020 முதல் 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு 94 மாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com