தென்காசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தென்காசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

தென்காசி நகராட்சி 21-வது வார்டு சொர்ணபுரம் மேட்டு தெருவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க பெறாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குடிநீர் இணைப்பு வழங்க கேட்டு அப்பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் நகராட்சி தலைவர் சாதிர், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மாத காலத்திற்குள் அந்த பகுதிக்கு குடிநீர் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com