மீன் வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே களைகட்டிய கடலூர் துறைமுகம்

பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
மீன் வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே களைகட்டிய கடலூர் துறைமுகம்
Published on: 

கடலூர்,

புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன் வாங்க குவிந்தனர்.

நேற்று வரை புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் காரணமாக பலர் அசைவ உணவுகளை தவிர்த்து வந்த நிலையில், இன்று மீன் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அதிகாலை முதலே கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும், இன்று துறைமுகத்தில் அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

மீன்களின் விலை விவரம்

துறைமுகத்தில் வஞ்சரம் மீன் கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரையிலும், வவ்வால் மீன் ரூ.700-க்கும், இறால் ரூ.250-க்கும், சங்கரா மீன் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததையடுத்து மீன் வாங்க பொதுமக்கள் திரண்டதால், கடலூர் மீன்பிடி துறைமுகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com