

சென்னை,
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் பெற்றுள்ள வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் விஜய்யின் நல்லாட்சி மீதும், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பது இந்த வெற்றியின் மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மக்களின் மகத்தான அன்பையும், நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் உறுதியாக நிறைவேற்றுவோம்.
இந்த சிறப்பான வெற்றியை வழங்கிய தாராபுரம், மதுராந்தகம் வாக்காளப் பெருமக்களுக்கும், வெற்றிக்கு கடுமையாக உழைத்த காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சகோதர, சகோதரிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.