மோடி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குமரி மக்கள்- அண்ணாமலை

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வரும் பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார்.
மோடி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குமரி மக்கள்- அண்ணாமலை
Published on

கன்னியாகுமரி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு வருகிறார்.

அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை 1 கி.மீ. தூரத்துக்கு 'ரோடு ஷோ' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக தளத்தில் இன்று கன்னியாகுமரி வருகைதரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

நமது பிரதமர் நரேந்திரமோடி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்.டி.ஏ-வின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குவதற்காக கன்னியாகுமரி மக்கள் இன்று அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com