மின்வெட்டு, விலைவாசி உயர்வு குறித்து மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா பேசியபோது திடீரென மின் தடை ஏற்பட்டது.
 பிரேமலதா விஜயகாந்த்
Published on: 

திருவள்ளூர்,

திருவள்ளூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது.

“மக்களிடம்தான் கேட்க வேண்டும்”

செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

தவெக அரசில் இலவச பஸ் வசதி, ஆட்டோ கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, வாக்களித்து வெற்றி பெற வைத்த பொதுமக்களிடம்தான் கேட்க வேண்டும். பொதுமக்கள்தான் இதுகுறித்துப் பதில் சொல்ல வேண்டும்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதுகுறித்தும் மக்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.

10 முறை மின்வெட்டு

நான் இங்கு வந்ததில் இருந்து இன்று மட்டும் இந்த இடத்தில் 10 முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திடீர் மின்தடை

பிரேமலதா செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் செல்போன் வெளிச்சத்தைப் பயன்படுத்தினர். மின்சாரம் மீண்டும் வந்த பிறகு அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போதே மின்தடை ஏற்பட்ட சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.

X