தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

இடையக்கோட்டை பகுதியில், தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
Published on

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு, சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இடையக்கோட்டை பகுதியில் சாரல் மழை பெய்தால் கூட பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் குழந்தைகள், முதியோர் உள்பட அனைத்து தரப்பினரும் தூக்கத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை இடையக்கோட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள லேத் பட்டறை, வர்த்தக நிறுவனங்களில் அனைத்து பணிகளும் முடங்கின. மின்சாரம் இல்லாததால், மோட்டார்களை இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். எனவே இடையக்கோட்டை பகுதியில் சீரான மின்சார வினியோகம் செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com