‘தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்’

‘தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்’ டாக்டர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்.
‘தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்’
Published on

சென்னை,

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 100-க்கும் கீழ் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி அன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. அடுத்த நாளே பாதிப்பு 100-ஐ கடந்தது. அதையடுத்து தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-க்கும் மேல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கியதால் தற்போது பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com