போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
Published on

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட போலீசார் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனுக்களை வழங்கினர்.

இதில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் திருப்தி அடையாத 7 மனுக்கள் உள்பட 47 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். முகாமில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com