

காஞ்சிபுரம்,
தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் கடந்த 11ந்தேதி வெளியானது.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வெல்ல போவது நானல்ல. தமிழகம் என தெரிவித்து உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொடக்கத்தில் இருந்தே பிற கட்சிகளை விட மும்முரமுடன் அரசியல் களத்தில் இறங்கி பிரசார பணிகளிலும் அவர் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரத்தில் இன்று 3வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உயிரே உறவே தமிழே, வணக்கம். எனது மூன்றாவது கட்ட பிரசாரம் இன்று (14-03-2021) முதல் துவங்குகிறது. இன்று மாலை 6:15 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகே மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். வருக என தெரிவித்து உள்ளார்.