டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி

டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

 அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரிட்டாப்பட்டி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை வைத்து தி.மு.க அரசு நாடகமாடியது. யாரோ ஒருவரின் ஆதாயத்திற்காக டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் தி.மு.க., அரசு அமைதியாக இருந்தது. டெண்டர் விட்ட பிறகு 9 மாதங்கள் எதற்கு அமைதியாக இருந்தீர்கள்? டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் திட்டம் ரத்தானது. நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் சிரமம் புரிந்து சட்டசபையில் பேசினேன். சட்டசபையில் நான் என் உயிரைக் கொடுத்தாவது விவசாய நிலங்களை காப்பாற்றுவேன் என தெரிவித்தேன்.

டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம். மக்கள் கொதித்து எழுந்ததால் தான் சுரங்கத்துக்கு எதிராக தி.மு.க., அரசு தீர்மானம் கொண்டு வந்தது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அ.தி.மு.க., எதிர்க்கும். டங்ஸ்டன் திட்டம் கொண்டு வந்தால் பாதிப்பு ஏற்படும் என 15 நாட்கள் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்தனர். இதனை நான் உணர்வு பூர்வமாக சொல்கிறேன். எந்த விதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. என்னை சந்தித்த விவசாயிகள் அனைவரின் வாழ்க்கை மேலும் உயர வேண்டும். உங்களது கஷ்டத்தில் அ.தி.மு.க., பங்கு பெறும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த திட்டம் வந்தாலும் அதனை அ.தி.மு.க., எதிர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com