பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!

அண்ணாவின் சிலைக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 118வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2026 அன்று காலை 9.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

நிர்வாகிகளுக்கு அழைப்பு

கழக முன்னாள் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத் திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, கல்வியாளர்கள் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com