

சென்னை,
பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.