புதுக்கோட்டையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி
Published on

புதுக்கோட்டை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வரும் 14ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கியில் 14ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார். விஜய் பிரசாரம் மேற்கொள்ள 15 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com