பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரதாப். இவர் கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 12-ந் தேதி மதியம் 1 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தார். தாறுமாறாக காரினை ஓட்டிவந்து விபத்தினை ஏற்படுத்திய ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com