சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிப்பு

பெட்ரோலில் மழை நீர் கலந்திருப்பதால், ஒருசில பெட்ரோல் நிலையங்களில் அவற்றை விநியோகம் செய்ய இயலவில்லை.
சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிப்பு
Published on

சென்னை,

சென்னையில் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. பெட்ரோலில் மழை நீர் கலந்திருப்பதால், ஒருசில பெட்ரோல் நிலையங்களில் அவற்றை விநியோகம் செய்ய இயலவில்லை.

இதுகுறித்து பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் சார்பில் கூறுகையில், "பெட்ரோல், டீசலில் மழை நீர் கலந்திருக்கும் என்பதால், உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் கையிருப்பிலோ அல்லது விற்பனை மையங்களுக்கு அவற்றை அனுப்புவதிலோ பாதிப்பு ஏதும் இல்லை. தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதிசெய்ய நேரமாவதால், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com