

சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று சற்று குறைந்து, ஒரு லிட்டர் ரூ.77.54-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் 23 காசுகள் குறைந்து ரூ.77.31-க்கும், டீசல் 27 காசுகள் குறைந்து ரூ.71.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.