கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). புகைப்பட கலைஞர். இவருக்கு திருமணமாகி தீபனா (28) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நேற்று வீட்டில் உள்ள தனியறையில் இருந்த பிரபாகரன் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com