பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு

பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

44வது செஸ் ஒலிம்பியாட்-2022, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023, தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை-2023 போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகி உள்ளனர். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும். மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் செஸ் விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com