பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை பெண்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டத்தில் பெண்கள் ஆட்டோக்கள் வாங்க தமிழக அரசு தலா 1 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.

தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com