8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வலசை வந்த குஜராத் இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்!

தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள உப்பு நீர்நிலைகளில் கிடைக்கும் பாசிகள் மற்றும் சிறிய இறால்கள் இவற்றின் முக்கிய உணவாகும்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வலசை வந்த குஜராத் இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்!
இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்
Published on: 

சென்னை,

குஜராத் மாநிலத்திலிருந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இளஞ்சிவப்பு பிளமிங்கோ (பூநாரை) பறவைகள் தமிழகத்தின் கடலோர நீர்நிலைகளுக்குப் பெருமளவில் வலசை வந்துள்ளன.

தமிழகத்திற்கு வருகை

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பறவைகள் தமிழகத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் குஜராத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளன.

நீர்நிலைகளை அழகாக்கிய பூநாரைகள்

தமிழகத்தின் முக்கிய நீர்நிலைகளான தூத்துக்குடி உப்புப் பாத்திகள், கோடியக்கரை வனவிலங்கு புகலிடம், தனுஷ்கோடி மற்றும் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆகிய பகுதிகளில் இந்த பறவைகளைக் காண முடிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டமாக வந்திறங்கியுள்ள பிளமிங்கோக்களால் இந்த நீர்நிலைகள் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றன. இதனைப் பறவை ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

வலசைக்கான காரணம்

பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் கடும் குளிர் நிலவும். அந்த சமயத்தில் அங்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், இனப்பெருக்கத்திற்காகவும் இவை தமிழகத்தை நோக்கி வருகின்றன. தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள உப்பு நீர்நிலைகளில் கிடைக்கும் பாசிகள் மற்றும் சிறிய இறால்கள் இவற்றின் முக்கிய உணவாகும். இந்த உணவுகளில் உள்ள 'கரோட்டினாய்டு' என்ற வேதிப்பொருள் காரணமாகவே பூநாரைகளுக்கு இந்த இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது.

தீவிர கண்காணிப்பு

கடந்த சில ஆண்டுகளாகப் போதிய பருவமழை இல்லாதது மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த பறவைகளின் வருகை குறைந்திருந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மீண்டும் அதிக அளவில் வரத் தொடங்கியது. இதனால், நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாக்கவும், பறவைகளுக்கு தடையற்ற உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

X