பிபின் ராவத் உடல் இன்று விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்று (வியாழக்கிழமை) தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
பிபின் ராவத் உடல் இன்று விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது
Published on

கோவை,

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கோவையில் இருந்து மருத்துவக்குழு குன்னூர் சென்றுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வெலிங்டன் ராணுவ மையத்தில் வைக்கப்படுகிறது.

ராணுவ மரியாதை

அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய மந்திரிகள், அதிகாரிகள் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. இறுதிச் சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com