தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் நடத்த திட்டம் - மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் எந்த வித பிரச்சினையும் இல்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் நடத்த திட்டம் - மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என 7 மாவட்டங்களின் கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறைகளை அவர் வழங்கினார். மிகவும் சவாலான தேர்தல் பணியில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் எந்த வித பிரச்சினையும் இல்லை என்று அறிவுறுத்திய அவர், தேர்தலை சந்திக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com