பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியீடு...!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியீடு...!
Published on

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தேர்வு முடிவை வெளியிட உள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/என்ற இணைய மூலம் மாணவர்கள் தேர்வு முடிவை காணலாம்.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்பின் மாவட்டங்களுக்கு தேர்வு முடிவுகள் உடனே அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பள்ளிகளுக்கு அதிகாரபூர்வ தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com