காதலனுடன் பிளஸ்-2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆரணி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலனுடன் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலனுடன் பிளஸ்-2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Published on

ஆரணி

ஆரணி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலனுடன் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் அபிநயா (வயது 17). இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (19), தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அபிநயாவும், சக்திவேலும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

இதனால் மனவேதனையில் இருந்த காதல் ஜோடி இருவரும் தற்கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் களம்பூரை அடுத்த பால்வார்த்து வென்றான் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் உடல் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com