பாமக எங்களுக்கே சொந்தம்: சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு

பாமக கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக எங்களுக்கே சொந்தம்: சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து. இருவரும் கட்சிக்கு உரிமை கொண்டாடி வருவதால், பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்படுள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், அன்புமணியின் பதவிக் காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும், ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தரப்புக்கே ஆதரவாக தேர்தல் ஆணையம் இருக்கிறது.

இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக் கோரி ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாமகவில் கட்சியை கைப்பற்ற ராமதாஸ் - அன்புமணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com