

சென்னை
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் மற்றும் அதன் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. எனவே நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.