

சென்னை,
பாமகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக பாமக (அன்புமணி) வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
”பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை மே 19-ஆம் நாள் காலை 10.00 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்கவுள்ளார்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.