பாமக தலைவர் பதவி விவகாரம்: தடையை நீக்கக்கோரிய டாக்டர் ராமதாஸ் வழக்கு இன்று விசாரணை

தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பிரச்சினை நாளைக்கே சரியாகி விடும் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
பாமக தலைவர் பதவி விவகாரம்: தடையை நீக்கக்கோரிய டாக்டர் ராமதாஸ் வழக்கு இன்று விசாரணை
Published on

சென்னை,

பா.ம.க. பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக் கக் கோரியும், பா.ம.க. தலைவராக தன்னை அங்கீகரிக்கக்கோரியும் சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி இடைக் கால தடை விதித்தது உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்கக்கோரி ராம தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, ஐகோர்ட்டு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஏற்கனவே தங்களது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பிரச்சினை நாளைக்கே சரியாகி விடும். கட்சியை வைத்துதான் இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியும். கட்சியின் பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை கீழ் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com