பாமகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் - துணை முதல்வர் உதயநிதி

பாமக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாமகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் - துணை முதல்வர் உதயநிதி
Published on

சேலம்,

 சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடந்தது. அதில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

சேலத்தைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் , அருள் ஆகிய இருவரும் தமிழக அரசை போட்டி போட்டு பாராட்டி இருக்கிறார்கள். அதாவது, சேலம் மாவட்டத்துக்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு என் பாராட்டுகள் என ஒற்றுமையோடு பாராட்டினார்கள். அவர்கள் எப்போதுமே இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

மக்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என உங்கள் சார்பில் நான் கேட்டுகொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சதாசிவம் அன்புமணி ஆதரவாளரகாவும் அருள் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com