3 நகரங்களில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு - பா.ம.க. அறிவிப்பு

பருவமழை காரணமாக 3 நகரங்களில் நடத்தப்பட இருந்த பா.ம.க. பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 17-ம் தேதி வடலூர், 20-ம் தேதி திண்டிவனம், 26-ம் தேதி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்; அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com