

சேலம்,
அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார்.
சேலத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. ராமதாஸை ஏற்ற பாஜகவினர் அன்புமணியை ஏற்க தயாராக இல்லை. அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளபோவதில்லை. எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள்.
6 முறை வாய்ப்பு தந்து 7-ம் முறை எம்.எல்.ஏ ஆக்கியவர் ராமதாஸ். சோதனையான சூழலில் அன்புமணிக்காக என் உயிரை பணயம் வைத்தேன். திமுக, அதிமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.
பிரிந்திருந்த ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேர்ந்த நிலையில் அருள் இவ்வாறு அறிவித்துள்ளார்.