

சென்னை,
தீபாவளியை முன்னிட்டு, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.75 லட்சம் பணியாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க 885 கோடி ரூபாய் செலவாகும் என தமிழக அரசு மதிப்பீடு செய்துள்ளது.
மின் வாரியம், நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பணிபுரியும், டி' பிரிவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. வழக்கமாக, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணை தொகை என மொத்தம், 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒருவருக்கு 8,400 ரூபாய் முதல் 16,800 ரூபாய் வரை கிடைக்கிறது.
இந்தாண்டு நவ., 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒரு மாதமே உள்ளதால் தீபாவளிக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கினால். 2.75 லட்சம் பேருக்கு, 385 கோடி ரூபாய் செலவாகும் என நிதித்துறை மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் தீபாவளி வருவதால், விரைவாக போனஸ் நிர்ணய பேச்சு தொடங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் இந்தாண்டும், 20 சதவீதம் போனஸ் வழங்கவே அதிக வாய்ப்புள்ளது. அதற்கு 2.75 லட்சம் பேருக்கு, 386 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப 5 சதவீதம் கூடுதல் போனஸ் அறிவித்தால் 100 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும்
இவ்வாறு அவர் கூறினார்.