விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு
Published on

சென்னை,

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் உண்மை நிலை தெரிய சி.பி.ஐ. விசாரணை நிச்சயம் தேவை. அப்போதுதான் தி.மு.க.வினரின் முகத்திரை கிழியும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை, நாளை (அதாவது இன்று) நாங்கள் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் ஆதரவு தரவேண்டும் என சீமான் கேட்டுள்ளார். அவருக்கு எங்களது வாழ்த்துகள். ஆனாலும் தே.மு.தி.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது. காரணம், ஈரோடு இடைத்தேர்தலில் நடந்ததுபோல ஒரு அநாகரிக அரசியல்தான் விக்கிரவாண்டியிலும் நடக்கப்போகிறது. இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. எதிர்ப்பை தெரிவிக்கவே புறக்கணிப்பு முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com